30 வயதிற்கு பிறகு மாதவிடாய் நாட்கள் குறைவது ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியா…???

Author: Hemalatha Ramkumar
21 December 2024, 6:46 pm

மன அழுத்தம், உணவு மற்றும் உடற்பயிற்சி மாதவிடாய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் ஒரு சில உடல்நல பிரச்சனைகளும் அதில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக அமைகின்றன. ஹார்மோன் சமநிலையின்மை, பெரிமெனோபாஸ் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், தைராய்டு கோளாறுகள் போன்ற நிலைகள் இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த காரணங்களை புரிந்து கொண்டு உங்கள் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரி செய்வதற்கான வழிகளில் ஈடுபடுவது உங்களுடைய ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். 

பெண்கள் 30 வயதை அடையும் பொழுது அவர்களுடைய மாதவிடாய்  சுழற்சியில் மாற்றம் ஏற்படுவதை கவனிப்பார்கள். அதிலும் குறிப்பாக ஏற்கனவே குறைந்த அளவிலான நாட்களுக்கு பீரியட்ஸ் அனுபவிக்கும் பெண்கள் இந்த அறிகுறிகளை உடனடியாக அனுபவிக்கின்றனர். ஒரு சில பெண்கள் வழக்கமான அளவிலான மாதவிடாய் சுழற்சியை  அனுபவித்தாலும் சில பெண்களுக்கு குறுகிய அல்லது சீரற்ற மாதவிடாய் ஒரு பிரச்சினையாக அமைகிறது. முதலில் இதற்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். புரோஜஸ்டரான் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இந்த வயதில் நார்மலான விஷயமாக இருந்தாலும் உங்களுடைய சுழற்சியில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுவது கவனத்திற்குரியது. இரண்டாவதாக மன அழுத்தம், தரமற்ற தூக்கம் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவையும் உங்களுடைய ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம்.

முன்னதாக பெண்கள் தங்களுடைய 17 முதல் 18 வயதில் பூப்படைய ஆரம்பித்தனர். ஆனால் இப்போது 8 முதல் 9 வயதிலேயே பெண்களுக்கு மாதவிடாய் வந்து விடுகிறது. எனவே எப்பொழுதும் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவற்றில் ஈடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது அவசியம். இது ஹார்மோன்களை சமநிலையாக வைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனை பின்பற்றிய போதும் உங்களுடைய மாதவிடாய் அளவில் மாற்றங்கள் இருக்கிறது எனும் பட்சத்தில் நீங்கள் உடனடியாக ஒரு மகப்பேறு நிபுணரை அணுக வேண்டும்.

30 வயதில் மாதவிடாய் எப்படி மாற ஆரம்பிக்கிறது?

உங்களுடைய ஆரம்பகால 30 வயதில் நீங்கள் அடிக்கடி ஓவுலேஷன் செயல்முறையை எதிர்கொள்வீர்கள் என்பதால் உங்களுடைய மாதவிடாய் சுழற்சியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. எனவே 20 வயதில் நீங்கள் மாதவிடாயை அனுபவித்தது போலவே 30 வயதிலும் எதிர்பார்ப்பீர்கள். எனினும் 35 வயதுக்கு பிறகு உங்களுடைய இனப்பெருக்கத்திறன் குறைய ஆரம்பிக்கிறது. நமக்கு வயதாகும் பொழுது கருமுட்டைகளின் அளவு குறைந்து, அதன் தரமும் குறைகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திறன் மோசமாகிறது.

இதன் விளைவாக சீரற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. இதன் காரணமாக உங்களுடைய மாதவிடாய் ரத்தப்போக்கு மற்றும் சுழற்சியின் நீளம் குறைகிறது. 30 வயதிற்கு பிறகு இனப்பெருக்க குறைய ஆரம்பிக்கிறது என்றாலும் கூட இந்த வயதிலும் பல பெண்களால் கருத்தரிக்க முடிகிறது. எனவே இதனை நினைத்து நீங்கள் பதட்டப்படத் தேவையில்லை. ஒருவேளை நீங்கள் கர்ப்பமாவதற்கு முயற்சி செய்து வருகிறீர்கள் என்றால் உங்களுடைய சுழற்சியை தொடர்ந்து கண்காணித்து கருமுட்டை வெளிவரும் நாட்களை கணக்கிட்டு அதற்கு தகுந்தார் போல காய்களை நகர்த்த வேண்டும்.

இதையும் படிச்சு பாருங்க:  முகப்பரு வடுக்களை மூன்றே நாட்களில் மறைய செய்யும் ஹோம் ரெமடீஸ்!!!

மறுபுறம் ஒருவருடைய மாதவிடாய் ஆரோக்கியத்தோடு தொடர்புடைய மருத்துவ நிலைகளை பற்றி பேசும் பொழுது பெரிமெனோபாஸ் கட்டத்தில் நுழையும் போது அல்லது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக குறுகிய அல்லது சீரற்ற மாதவிடாய் ஏற்படலாம். இது குறிப்பாக குறைவான புரோஜஸ்டரான் அளவுகளால் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலான மாற்றங்கள் இயற்கையான வயதாகும் செயல்முறைகளால் ஏற்பட்டாலும் சில அறிகுறிகளை நீங்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், தைராய்டு கோளாறுகள் அல்லது கருப்பை நீர்க்கட்டிகள் போன்றவையும் உங்களுடைய மாதவிடாய் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

இதற்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. குறுகிய மாதவிடாயோடு சேர்ந்து அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். தொடர்ச்சியாக உங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கண்காணித்தல், ஆரோக்கியமான உணவின் அடிப்படையிலான ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மன அழுத்த கட்டுப்பாடு மற்றும் வழக்கமான செக்கப் ஆகியவை உங்களுடைய மாதவிடாய் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் உறுதி செய்யும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 59

    0

    0

    Leave a Reply