தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!
Author: Selvan21 December 2024, 8:24 pm
விடுதலை 2: முதல் நாள் வசூல்
வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படமான விடுதலை 2 நேற்று திரையரங்கில் வெளியானது.
விடுதலை1 போன்று ரசிகர்களின் பாராட்டை பெறுமா என்ற கேள்விக்குறியுடன் இருந்த பலருக்கு,விடுதலை2 தரமான சம்பவத்தை பண்ணியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,பாராட்டை குவித்து வருகிறது.இப்படத்தில் முக்கிய ரோலாக விஜய்சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்படி போராடுகிறார்,யார் இந்த வாத்தியார்,அவருடைய குறிக்கோள் என்ன என்பதை வெற்றிமாறன் கச்சிதமாக காட்டியுள்ளார்.
இதையும் படியுங்க: அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
இந்த சூழலில் நேற்று திரையரங்கில் கூட்டம் அலைமோதிய நிலையில்,உலகளவில் முதல் நாள் வசூல் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 12 கோடி வசூலை நேற்று எட்டியுள்ளது.
மேலும் இன்றும்,நாளையும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது.