குடை மிளகாயை வைத்து வித்தியாசமான ருசியில் சட்னி!!!

Author: Hemalatha Ramkumar
21 December 2024, 8:07 pm

என்னதான் தினமும் இட்லி தோசை என்று செய்து கொடுத்தாலும் விதவிதமாக சைட் டிஷ் இருந்து விட்டால் பிரச்சனையே இருக்காது. இந்த பொருளை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற ரூல்ஸ் எதுவும் கிடையாது. அப்படி பார்க்கும்போது, குடைமிளகாயை வைத்துக் கூட ருசியான சட்னி செய்யலாம். குடைமிளகாயில் வைட்டமின் அதிகமாக இருப்பதால் நம்முடைய உணவில் சேர்ப்பதற்கு இது ஒரு சிறந்த பொருளாக அமைகிறது. இந்த குடைமிளகாய் சட்னி இட்லி மற்றும் தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும். இது தவிர நீங்கள் சாண்ட்விச்சுகளுக்கும் இந்த சட்னியை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

குடைமிளகாய் – 2 

தக்காளி – 2 

வெங்காயம் – 2 

வரமிளகாய் – 3 

பூண்டு – 3 பல் 

கடுகு உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் 

புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு 

உப்பு – தேவையான அளவு

செய்முறை 

*ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி வர மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும். 

*பூண்டு சிவந்து வந்தவுடன் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும். 

*இப்போது அதே கடாயில் குடைமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து 3 முதல் 4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து வதக்கவும். 

*தக்காளி வெந்த பிறகு அதனையும் வரமிளகாய், பூண்டோடு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். 

*இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து டேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படிச்சு பாருங்க: 30 வயதிற்கு பிறகு மாதவிடாய் நாட்கள் குறைவது ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியா…???

*இப்போது தாளிப்பதற்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். 

*கடுகு பொரிந்த உடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்த சட்னியை இதில் ஊற்றவும். 

*தண்ணீர் வற்றி நன்றாக கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 16

    0

    0

    Leave a Reply