கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!

Author: Selvan
22 December 2024, 4:54 pm

பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

சமீபத்தில் இவருடைய திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.பல சினிமா பிரபலங்கள்,நண்பர்கள் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷை வாழ்த்தினார்கள்.

Varun Dhawan and Keerthy Suresh viral video

இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா,நடிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்,தற்போது அவர் பாலிவுட்டில் முதல் முதலாக நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் பேபி ஜான்,இப்படத்தை பிரபல இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்க: கழுத்தில் தாலியுடன் மேடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!

இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார்.சமீபத்தில் மும்பையில் நடந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கழுத்தில் தாலியுடன்,சிவப்பு நிற கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.இதுவரை ஹோம்லியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டுக்கு சென்றதும் கவர்ச்சியில் ஜொலிக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

தற்போது,அந்த விழாவில் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து பேபி ஜான் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!