சென்னையில் இன்று (டிச.23) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனிடையே, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமலும் இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. அதேநேரம், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை அதிரடி சரிவைச் சந்தித்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது. இதன்படி, இன்று (டிச.23) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 745 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் மாற்றம் ஏதும் இல்லாமல் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.