நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதை எப்படி கண்டுபிடிக்கலாம்…???

Author: Hemalatha Ramkumar
23 December 2024, 10:52 am

எந்தவிதமான தொற்றுகள், நோய்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வெளிப்பொருட்கள் இருந்து நம்மை பாதுகாப்பதில் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு முக்கிய பங்கு கொண்டுள்ளது. இது சிறந்த ஒரு பாதுகாப்பு முறையாக செயல்பட்டு, நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நலனையும் பாதுகாக்கிறது. எனினும் ஒரு நபருடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழந்து இருந்தால் அதனால் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, உடலுக்கு மோசமான தீங்கு ஏற்படும் அளவுக்கு பிரச்சனைகள் வரலாம். வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்பு என்பது மோசமான உணவு, போதுமான அளவு தூக்கம் இல்லாதது, மன அழுத்தம் மற்றும் ஒரு சில மருத்துவ நிலைகளின் காரணமாக ஏற்படலாம். கூடுதலாக அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை சாப்பிடுவதாலும் ஏற்படலாம். எனவே உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு மோசமான நிலையில் இருப்பதை கண்டறிய உதவும் சில அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்ந்த கைகள் 

கைகள் எப்பொழுதும் குளிர்ந்த நிலையில் இருப்பது வலுவிழுந்த நோய் எதிர்ப்பு அமைப்பின் முக்கியமான ஒரு அறிகுறி. மோசமான ரத்த ஓட்டம் கைகளில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு அமைப்பு சரியான ஆரோக்கியத்தில் இல்லாததை நமக்கு அறிவுறுத்துகிறது.

சோர்வு 

தொடர்ச்சியாக சோர்வை ஏற்படுவதும் மோசமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கான ஒரு அறிகுறி. உடலின் பாதுகாப்பு அமைப்பு சமரசம் செய்யப்படும் பொழுது அதனால் நமக்கு சோர்வு, சோம்பேறித்தனம் மற்றும் எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் போகிறது. எனவே எவ்வளவு தூங்கினாலும் நீங்கள் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் தொற்றுகள் அல்லது வீக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு தவித்து வருகிறது என்று அர்த்தம்.

இதையும் படிச்சு பாருங்க: குடை மிளகாயை வைத்து வித்தியாசமான ருசியில் சட்னி!!!

மூட்டு வலி 

மூட்டு வலியும் வலுவிழுந்த நோய் எதிர்ப்பு அமைப்பின் ஒரு அறிகுறி. நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவில்லாமல் இருந்தால் அதனால் வீக்கம் ஏற்பட்டு மூட்டுகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படுகிறது.

சருமத்தில் தடிப்புகள்

தொடர்ச்சியாக அடுத்தடுத்து உங்களுடைய தோலில் தடிப்புகள் மற்றும் எரிச்சல் மோசமான நோய் எதிர்ப்பு அமைப்பின் ஒரு அறிகுறி. உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழக்கும் பொழுது அதனால் வீக்கமும், உணர்திறனும் அதிகரித்து தோலில் விளைவுகள் ஏற்படுகிறது. தொடர்ச்சியான தடிப்புகள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியமான ஒரு குறிகாட்டி.

அடிக்கடி செரிமான பிரச்சனைகள் 

வாயு தொல்லை, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளால் நீங்கள் அடிக்கடி அவதிப்பட்டு வந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழந்து இருப்பதற்கான ஒரு சிக்னல். அது நோய் எதிர்ப்பு அமைப்பு மோசமான நிலையில் இருந்தால் குடலில் உள்ள நுண்ணுயிரிகள் சமநிலை இல்லாமல், அதனால் நோய் எதிர்ப்பு செயல்பாடு சிறப்பாக நடைபெறாமல் போகும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 66

    0

    0

    Leave a Reply