மாமன் மகளையும் விட்டு வைக்கல.. ஆசை வலையில் வீழ்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள்.. என்ன நடந்தது?
Author: Hariharasudhan23 December 2024, 1:30 pm
மயிலாடுதுறையில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம், நகை ஆகியவற்றை பறிக்கும் செயலில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையைச் சேர்ந்த நபர் ஒருவர், இளம்பெண்கள் முதல் திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் வரை பலரை ஏமாற்றி நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறுகையில், “என்னுடைய தோழி மூலமாக அவர் எனக்கு அறிமுகமானார். நண்பர் என்ற பாணியில் என்னிடம் நல்ல முறையில் பேசி வந்தார். பின்னர், எனக்கு சில பிரச்னைகள் உள்ளது, குடும்பத்தில் கஷ்டம் எனக் கூறியே 10 சவரன் நகை மற்றும் பணத்தைப் பெற்று உள்ளார்.
பின்னர் அவர் மோசடி செய்தார் என அறிந்த பின், அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து என்னை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகாரளிக்க வந்தபோது, பேசிய ஆவணங்களைக் கொண்டு வரச் சொல்கின்றனர். என்னைப் போன்று 10 பேரிடம் இவர் ஏமாற்றி உள்ளார்” எனக் கூறினார். இதனிடையே, கைது செய்யப்பட்ட நபர், ஜாஹீர் என அனைவரிடமும் பேச்சு கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட பெண்களில் மற்றொருவர், “எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. மாமன் மகன் என்ற உறவில் நான் அவரிடம் பேசி வந்தேன். உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் போன்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்.
இதையும் படிங்க: பாழடைந்த கட்டிடம்.. பேச்சு கொடுத்த இளைஞர்.. 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!
எனவே, நான் எனது கணவரிடம் விவாகரத்து பெற்று வந்துவிட்டேன். அப்போது என்னிடம் 10 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் எனது தாய் மனநலம் குன்றியவர் என்பதால் வீட்டுப் பத்திரம் ஆகியவை இருந்தது. இதனையடுத்து, அவனை நம்பி அவனது வீட்டுக்குச் சென்றேன்.
அங்கு என்னை அவன் மட்டுமல்லாது, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார்கள். தெருவில் எல்லாம் என்னை அடித்தார்கள். பின்னர், என்னுடைய நகை மற்றும் பணத்தையும் வாங்கிக் கொண்டனர். இதுபோன்று பல பெண்கள் இவர்களிடம் பாதிக்கப்பட்டு உள்ளனர்” எனத் தெரிவித்தார்.