திமுக செயல்பாடுகளுடன் முரண்பாடு இருக்கு.. அப்போ 25 தொகுதி? திருமாவளவனின் ப்ளான்!

Author: Hariharasudhan
23 December 2024, 5:55 pm

திமுக அரசின் செயல்பாடுகளுக்காக கூட்டணி உள்ளிட்ட மிகப்பெரிய முடிவை உடனே எடுத்துவிட முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடலூரில் இன்று (டிச.23) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “விசிகவுக்கு 25 தொகுதிகள் வேண்டும் என்பது வன்னி அரசின் (விசிக துணைப் பொதுச் செயலாளர்) தனிப்பட்ட கருத்து. தவிர, அது விசிக நிர்வாகிகளின் விருப்பமும் தான்.

கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விரும்புவது இயல்பானதே. அதேநேரம், விசிக என்றைக்குமே இவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்கூட்டியே வைத்ததில்லை. முந்தைய தேர்தல்களில் நாங்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட்டுள்ளோரும்” என்றார்.

முன்னதாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியிருந்தார். இந்த நிலையில், இது தொர்பாக பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னம் 15 மாதங்கள் உள்ளன.

Vanni Arasu on DMK vs VCK sheet sharing

இப்போதே தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேசத் தேவையில்லை. அதிமுக போல் திமுக கூட்டணிக் கட்சிகளை வெளியேற்றும் இயக்கம் அல்ல. கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மதிப்பு அளிக்கும் கட்சி திமுக. முதல்வர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளை மதிப்பவர். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது கூட்டணியில் இருந்த கட்சிகள் இப்போதும் கூட்டணியில் இருக்கின்றன.

இதையும் படிங்க: கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை கடித்த பாம்பு? டீன் விளக்கம்!

முதல்வர் தொடர்ச்சியாக தங்களது கூட்டணியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு கூட்டணிக் கட்சிகளை முதல்வர் மதிக்கும் பண்பே காரணமாக உள்ளது” எனத் தெரிவித்தார். இவ்வாறு கூட்டணி மற்றும் சீட் எண்ணிக்கை தொடர்பான பேச்சு பரபரப்பான நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “திமுக செயல்பாடுகளில் முரண்பாடு இருக்கிறது. அதனை கேட்டோ, போராடியோ, மனுக்கள் கொடுத்தோ தீர்த்துக் கொள்வோம். ஆனால், கூட்டணி உள்ளிட்ட மிகப்பெரிய முடிவுகளை இதற்காக எடுத்துவிட முடியாது. மக்கள் நலன், நாட்டு நலன் கருதி கூட்டணி தொடர்பான முடிவெடுப்போம்” என திருமாவளவன் கூறியுள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 46

    0

    0

    Leave a Reply