கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை கடித்த பாம்பு? டீன் விளக்கம்!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 5:44 pm
கோவை அரசு மருத்துவமனையில் 1000 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் செய்தி.. ஃபெயில் ஆனால் இனி அதே வகுப்புதான்!
இந்த நிலையில் நேற்று முன்தினம் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் அறையில் பயிற்சி மருத்துவர் ஜெயக்குமார் தூங்கிக் கொண்டு எழுந்து இருக்கும் போது ஏதோ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையிலேயே தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும்போது :- பாம்பாக இருக்கலாம், அல்லது பூச்சியாக இருக்கலாம், இருந்தாலும் அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். அவர் தற்போது நன்றாக இருக்கிறார் என தெரிவித்தார்.