இந்த மாதிரி பழக்க வழக்கங்கள் இருக்கவங்களுக்கு தொப்பை கொழுப்பு வரது உறுதி!!!
Author: Hemalatha Ramkumar24 December 2024, 10:52 am
ஒருவருடைய உடல் தோற்றத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் தொப்பை கொழுப்பை யாருக்கு தான் பிடிக்கும். இது பல நபர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இடுப்பை சுற்றி உள்ள அளவுக்கு அதிகமான கொழுப்பு நம்மை கோபப்படுத்தி நம்முடைய தன்னம்பிக்கையை குறைக்கிறது. ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள காரணத்தை பற்றி பார்க்கும் பொழுது இந்த விடாப்பிடியான தொப்பை கொழுப்புக்கு பின் நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் இருக்கிறது. அதிக கலோரி உணவுகள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பிற முக்கியமான பழக்கங்களில் காரணமாக இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இல்லாத உணவை சாப்பிடுவது மெட்டபாலிசம் மற்றும் செரிமான செயல்முறையை சீராக நடைபெறவிடாமல் செய்து அளவுக்கு அதிகமான தொப்பை கொழுப்பை சேமிப்பதற்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் தொப்பை கொழுப்பை தடுக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான பழக்க வழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவு அளவு கட்டுப்பாடு
எந்த ஒரு உணவு அளவு கட்டுப்பாடும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவது தொப்பை கொழுப்பை ஏற்படுத்தும் ஒரு பொதுவான தவறு. அதிகப்படியான கலோரிகளை சாப்பிடுவது, அது ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கூட உங்களுடைய உடல் எடை குறைப்பு முயற்சிக்கு தடை போட்டு தொப்பை கொழுப்பை ஏற்படுத்தும். எனவே சாப்பிடும் பொழுது எப்பொழுதும் கவனம் அவசியம். நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படும் பொழுது ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்து தொப்பை கொழுப்பை குறைக்கலாம்.
புரோட்டின் குறைபாடு
ஒருவர் சாப்பிடும் உணவில் புரோட்டின் குறைபாடு இருந்தால் அது தொப்பை கொழுப்பை ஏற்படுத்தும் மற்றொரு பொதுவான தவறாக அமைகிறது. புரோட்டீன் என்பது தசைகளை வளர்க்கவும், அதனை சரி செய்யவும் உதவி மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, கொழுப்பை அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான புரோட்டீன் இல்லாவிட்டால் அதனால் தசையிழப்பு ஏற்பட்டு மெட்டபாலிசம் மெதுவாகும். இதனால் வயிற்றை சுற்றி உடல் எடை அதிகரிக்கும்.
இதையும் படிச்சு பாருங்க: வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர்… காலை தூங்கி எழுந்தவுடன் எது குடிப்பது சிறந்தது…???
அளவுக்கு அதிகமான சர்க்கரை
அதிகப்படியான சர்க்கரை சாப்பிடுவதை நீங்கள் நிச்சயமாக தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் மற்றும் மன அழுத்த ஹார்மோனை அதிகரித்து அதனால் தொப்பை கொழுப்பு சேமிப்பதற்கு வழிவகுக்கும். கூடுதலாக சர்க்கரை என்பது வெற்று கலோரிகள் என்பதால் இது உடல் எடை அதிகரிப்பு செயல்முறையில் எந்த ஒரு ஊட்டச்சத்து மதிப்பையும் வழங்காது.
ஸ்நாக்ஸ் சாப்பிடுவது
தொடர்ச்சியாக ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் வீண் தொப்பை கொழுப்பு பிரச்சனை உருவாவதற்கு வாய்ப்புள்ளது. நாள் முழுவதும் தின்பண்டங்களை சாப்பிடுவது மெட்டபாலிசத்தை சீர்குலைத்து, இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி கொழுப்பை அதிகரிக்கும். கூடுதலாக நீங்கள் எந்த ஒரு அளவும் இல்லாமல் தின்பண்டங்களை சாப்பிடும் பொழுது அதில் ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் இருக்கலாம். மேலும் இதில் அதிக கலோரிகள், சர்க்கரை மற்றும் உப்பு இருப்பதால் இது தொப்பை கொழுப்புக்கு வழிவகுக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.