இந்த தடவ மிஸ் ஆகாது..பிரபல இயக்குனரிடம் தஞ்சம் அடைந்த நயன்தாரா…ஹீரோ இவரா!
Author: Selvan24 December 2024, 12:56 pm
20 ஆண்டுகளுக்கு பிறகு ஹரியுடன் நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.இவர் சமீப காலமாக பல வித சர்ச்சைகளில் சிக்கி,விவாத பொருளாக மாறி வருகிறார்.இதனால் இவர் கட்டி காப்பாற்றி வந்த பெயர்,புகழ் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் நடித்த படங்களும் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.இதனால் இவர் முதல் படமான ஐயா இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
இதையும் படியுங்க: வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறார்.இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தில் நயன்தாராக்கு ஜோடியாக,4 வது முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையவுள்ளார்.
கடந்த சில வருடமாக,பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, மீண்டும் நயன்தாராவுடன் இணைந்திருப்பதால்,இப்படம் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக,விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் படம் தோல்வியை சந்தித்ததால்,இந்த கூட்டணி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையலாம்.மேலும்,இது குடும்பங்கள் கொண்டாடும் பக்கா கமெர்சியல் படமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வந்துள்ளது.