துணை முதல்வர் உதயநிதி போஸ்டர் கிழிப்பு… பாமக போராட்டத்தில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2024, 3:48 pm

விழுப்புரத்தில் நடைபெற்ற வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றாத தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பாமகவினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் ஆர்ப்பாட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு உணவு சாப்பிடுவதற்காக அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

பாமகவினர் ராமதாசை காண உள்ள நுழைய முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் இரும்பு கதவுகளை அடைத்து அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது காவல்துறையினருக்கும் பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படியுங்க: வருங்கால முதலமைச்சர் விஜய்.. பெரியாருக்கு மரியாதை செலுத்தும் போது தவெக கோஷம்!!

உடனே பாமகவினர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடு முயன்றனர். அப்போது ஒரு சிலர் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை கிழித்ததால் மேலும் பதற்றம் நீடித்தது.

பின்னர் காவல்துறையினர் பாமக தொண்டர்களை சமாதானம் செய்து பாமக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Udhayanidhi Poster Damage in PMK Protest

இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போஸ்டரை கிழித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?