அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!

Author: Selvan
24 December 2024, 7:23 pm

புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் அதிரடி முடிவு

புஷ்பா 2 படத்தை விட,ரிலீஸின் போது ஏற்பட்ட திரையரங்கு சம்பவம் காட்டு தீ போல் பரவி வருகிறது.அதிலும் குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

Pushpa 2 director Sukumar decision

இதனால் படக்குழு புஷ்பா 2 வெற்றியை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இன்று அல்லு அர்ஜுனிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் சினிமாவில் இருந்து விலக ரெடி என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

சமீபத்தில் நடந்த கேம் சேஞ்சர் பட ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட சுகுமார் இந்த தகவலை கூறியுள்ளார்.சங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக ஜனவரி 10 ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள திரைப்படம் கேம் சேஞ்சர்.

இப்படத்தில் ராம் சரண்,அஞ்சலி,எஸ. ஜே.சூர்யா என பலர் நடித்துள்ளனர்.முன்னதாக இந்த விழாவில் பேசிய சுகுமார் இப்படத்திற்காக ராம் சரணுக்கு தேசிய விருது கிடைக்கும் என பாராட்டி இருந்தார்.

பின்பு கீழே அமர்ந்திருந்த இயக்குனர் சுகுமாரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் “உங்களிடம் எதாவது ஒரு விசயத்தை விட்டுவிட சொன்னால் நீங்கள் எதை விடுவீர்கள் என்று கேட்க அதற்கு சுகுமார் சற்றும் யோசிக்காமல் சினிமா என்று கூறி…சினிமாவை விட்டு விலக விரும்புவதாக” தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி ஆகினார்கள்.பக்கத்தில் இருந்த ராம் சரண் அவரிடம் இருந்த மைக்கை புடுங்கி சினிமாவை விட்டு விலக கூடாது என கூறினார்.

ஏற்கனவே அல்லு அர்ஜுன் பிரச்சனை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,தற்போது சுகுமாரின் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 47

    0

    0

    Leave a Reply