முள்ளங்கி இலைகளை யூஸ் பண்ணாம தூக்கி எறிந்தால் உங்களுக்கு தான் பெரிய லாஸ்!!!
Author: Hemalatha Ramkumar25 December 2024, 11:14 am
பொதுவாக முள்ளங்கி சமைக்கும்போது பலர் அதன் இலைகளை குப்பையாக எண்ணி வீசி விடுவது வழக்கம். ஆனால் முள்ளங்கி இலைகள் சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பது மட்டுமல்லாமல் அதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகளும் அடங்கியுள்ளது. எனவே முள்ளங்கி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஊட்டச்சத்து மிகுந்தது
முள்ளங்கி இலைகள் வைட்டமின்கள் A, C, B மற்றும் B வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக அமைகிறது. வைட்டமின் A என்பது ஆரோக்கியமான பார்வை திறன் மற்றும் சருமத்திற்கும், வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், கொலாஜன் உற்பத்திக்கும் உதவுகிறது. அதே நேரத்தில் வைட்டமின் K ரத்த உறைதல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. கூடுதலாக முள்ளங்கி இலைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான தாதுக்களும் அடங்கியுள்ளது.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ளது
முள்ளங்கி இலைகளில் நம்முடைய உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுகிறது. ஃபிளாவனாய்டுகள், மற்றும் பீனாலிக் அமிலம் போன்ற காம்பவுண்டுகள் சமநிலையாக்கி நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். இதனால் இதய நோய் மற்றும் கேன்சர் போன்ற கொடிய பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
செரிமான ஆரோக்கியம்
முள்ளங்கி இலைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் நார்ச்சத்து குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் சமநிலையை பராமரித்து ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. இதற்கு நீங்கள் முள்ளங்கி இலைகளை சாலட், சூப் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம்.
இதையும் படிச்சு பாருங்க: செட்டிநாடு ஸ்பெஷல் சுவையான சீனி பணியாரம்!!!
குறைவான கலோரிகள்
முள்ளங்கி இலைகள் குறைவான கலோரிகள் கொண்டவை என்பதால் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கான உணவில் இதனை நீங்கள் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் முள்ளங்கி இலைகளை சுத்தமாக கழுவி அதனை பொடியாக நறுக்கி, உங்களுக்கு விருப்பமான உணவுகளோடு சேர்த்து கூடுதலாக சாப்பிடலாம்.
உணவு வீணாவதை தடுப்பது
முள்ளங்கி இலைகளை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் உணவு வீணாவதை குறைக்கலாம். பொதுவாக தூக்கி எறியப்படும் தாவரங்களில் பல பகுதிகள் உண்ணக்கூடியவை மற்றும் ஊட்டச்சத்து மிகுந்தவை.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.