OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
Author: Selvan25 December 2024, 12:50 pm
ரெட்ரோ ஸ்டைலில் சூர்யா 44!
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதில் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இப்படத்தினை 2D நிறுவனம் தயாரிக்கிறது.படத்தில் நடிகர் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம்,கருணாகரன் போன்றோர் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.கடந்த சில வருடங்களாக பெரும் வெற்றியை ருசிக்காத சூர்யாவுக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்க: அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.காதல் சம்பந்தமான ஒரு கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகி வருகிறது.இப்படத்திற்கு தற்போது ரெட்ரோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதிலும் சூர்யா,பூஜா ஹெக்டே காதல் காட்சிகளில்,பழைய பட சூர்யாவை பார்ப்பது போல் உள்ளது.இப்படத்திற்கு நடிகை ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.ரெட்ரோ படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையொட்டி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.