எம்ஜிஆர் மீது வழக்கு தொடுத்து ஜெயித்தவர் என் அப்பா… பிரபல நடிகர் ஓபன் டாக்!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2024, 12:39 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையாகரம் கிராமத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் குதுகுல கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு கிறிஸ்மஸ் தாத்தாவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
தொடர்ந்து தனது திரையுலக வாழ்வில் நடைபெற்ற பல்வேறு கஷ்டங்களும் மற்றும் உடல் ரீதியாக பட்ட கஷ்டங்கள் குறித்து உரையாடினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது எம்ஜிஆர் தமக்கு சகலை என்றும் எம்ஜிஆருக்கும் என்னுடைய அப்பாவிற்கும் இடையே நடைபெற்ற தகராறு நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்து அதில் என்னுடைய அப்பா வழக்கில் வெற்றி பெற்று வாழ்க்கையில் தோற்றதாகவும் எம்ஜிஆர் வழக்கில் தோற்று வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணாவை பார்ப்பதற்காக ஏராளமான கிறிஸ்தவர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர் விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளதை பற்றி கேட்ட கேள்விக்கு அஜித் கட்சி தொடங்கட்டும் பதில் கூறுகிறேன் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.