சினிமானா உயிர்…போலீஸ் வேலையை தூக்கி வீசிய பிரபல நடிகர்…ஆதரவு கொடுத்த வெற்றிமாறன்.!
Author: Selvan25 December 2024, 2:43 pm
சினிமாவுக்காக போலீஸ் வேலையை தியாகம் செய்த இயக்குனர் தமிழ்
பல பேருக்கு சினிமா ஆசையா இருக்கும் ஆனால் ஒரு சிலருக்கு அது பெரிய கனவா இருக்கும் ,எப்படியாவது சினிமாவில் அடியெடுத்து சாதனை படைக்க வேண்டும் என பல பேர் இன்றும் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகரும்,இயக்குனருமான தமிழ் சினிமாவிற்காக பெரிய தியாகத்தை பண்ணியுள்ளார்.அதாவது அவர் பார்த்து வந்த போலீஸ் அரசாங்க வேலையை விட்டுவிட்டு,சினிமா வாய்ப்பு தேடி,சென்னையில் பல நாட்களாக அலைந்துள்ளார்.
போலீஸ் கதையை மையமாக வைத்து வெளிவந்த டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் தமிழ் .அதில் போலீஸ் பறிச்சியின் போது நடக்கும் ஊழல்கள் மற்றும் போலீஸ் வேலை எவ்வளவு கடினம் என்பதை தத்ரூபமாக காட்டியிருப்பார்.
இதையும் படியுங்க: நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
அவர் முதலில் போலீஸ் வேலையே ராஜினாமா செய்தது,அவரது மனைவி மற்றும் வீட்டுக்கு தெரியாது என்று ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.மேலும் செலவுக்காக மனைவியிடம் இடம் வாங்க பணம் தேவைப்படுகிறது என்று பொய் சொல்லி நகைகளை வாங்கி,அதை அடமானம் வைத்து சென்னையில் தங்கி,பல நாள் சினிமா வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.
அப்போது தான்,அவர் வெற்றிமாறனை சந்தித்து அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.இதற்காக ஒரு வருடம் அவர் கடுமையாக உழைத்துள்ளார்.
வெற்றிமாறனுடன் இணைந்த பிறகு தான் அவர் சினிமாவிற்குள் வந்த உண்மையை மனைவியிடம் சொல்லியுள்ளார்.தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடம் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.