வீடியோவை பார்த்து கண்ணீர் விட்ட அல்லு அர்ஜுன்…போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது..!
Author: Selvan25 December 2024, 4:20 pm
அடுக்கடுக்கான கேள்வியை கேட்ட போலீஸார்
புஷ்பா-2 சிறப்பு காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நேற்று அல்லு அர்ஜுனிடம் போலீசார் பல கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்,அவருடைய மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என பல அரசியல்வாதிகள்,பொதுமக்கள் அல்லு அர்ஜுன் மீது புகார்களை கூறி வந்தனர்.இந்த சம்பவம் காரணமாக நேற்று ஹைதராபாத் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
அவர் கூட அவருடைய தந்தையும் சென்றிருந்தார்.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மேலாக போலீஸார் அல்லு அர்ஜுனிடம் பல கேள்விகளை எழுப்பினர்.விசாரணைக்கு முன்பு அல்லு அர்ஜுனிடம் சம்பவத்து அன்றைக்கு நடந்த நிகழ்வுகளை வீடியோவாக காண்பித்தனர்.அப்போது பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்த காட்சியை பார்த்து கண்ணீர் வடித்தார்.
இதையும் படியுங்க: சினிமானா உயிர்…போலீஸ் வேலையை தூக்கி வீசிய பிரபல நடிகர்…ஆதரவு கொடுத்த வெற்றிமாறன்.!
அப்போது அவரிடம் ஜாமினில் வெளியே வந்து செய்தியாளர்கள் சந்திப்பை நீங்கள் எப்படி நடத்தலாம்?யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது,போலீஸ் அனுமதி மறுத்தும் நீங்கள் திரையரங்கிற்கு சென்றது ஏன்? என பல கிடுக்குபிடி கேள்விகளை கேட்டனர்.
அப்போது இருட்டில் அங்கே நடந்த சம்பவம் எனக்கு தெரியவில்லை எனவும்,போலீஸார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர தயார் என்று அவர் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.