#ShameOnYouStalin… போட்டோ போட்டு எதிர்த்த அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2024, 1:32 pm

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என அண்ணாமலை ஏற்கனவே குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க : யார் அந்த SIR? மாணவியின் பகீர் வாக்குமூலம்.. அதிரவைக்கும் FIR!

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக சென்னையில் அரசியல் கட்சிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக மறுபக்கம் பாஜக போராட்டம் நடத்தியது.

இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் போராட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசையை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். அதே சமயம் அதிமுகவினரையும் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை.

மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் ஸ்டாலின் அவர்களே? #ShameOnYouStalin என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!