நூறாண்டு காலமாக மலச்சிக்கலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கை வைத்தியம்!!!

Author: Hemalatha Ramkumar
26 December 2024, 2:57 pm

ஒருவேளை நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்து, அதற்கான ஒரு இயற்கை தீர்வை தேடுகிறீர்கள் என்றால் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த விளக்கெண்ணெய் உங்களுக்கு அற்புதமான இயற்கை மருந்தாக இருக்கும். ரிஸினோலிக் அமிலம் நிறைந்த விளக்கெண்ணெய் குடலில் இயக்கங்களை தூண்டி, வீக்கத்தை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனைக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகிய இரண்டை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய் என்பது அதன் இயற்கையான மலமிளக்கும் விளைவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது இந்தக் காரணத்திற்காகவே உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. குடலில் உள்ள தசைகளின் அசைவுகளை தூண்டுவதன் மூலமாக இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.

விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் *விளக்கெண்ணெயில் காணப்படும் ரிஸினோலிக் அமிலம் வீக்க எதிர்ப்பு விளைவுகளை கொண்டது. இதனால் இது ஆர்த்ரைட்டிஸ் பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.

*விளக்கெண்ணெய் ஈரப்பதமான ஒரு சூழலை உருவாக்குவதன் மூலமாக காயங்களை விரைவாக ஆற்றுகிறது.

*மேற்பூச்சாக பயன்படுத்தும் பொழுது விளக்கெண்ணெய் வலியை போக்குகிறது. அதிலும் குறிப்பாக மூட்டு வலிகளை குறைப்பதற்கு இது உதவுகிறது.

*விளக்கெண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இருப்பதாக ஒரு சில ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளக்கெண்ணையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் 

விளக்கெண்ணெய் சப்ளிமெண்ட்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல், தடிப்புகள் சில சமயங்களில் மாயை போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இதையும் படிச்சு பாருங்க:  அழகான, ஆரோக்கியமான கால்களுக்கான பராமரிப்பு குறிப்புகள்!!!

மலச்சிக்கல் பிரச்சனைக்கு விளக்கெண்ணெய்

இந்தியாவிலுள்ள 22% நபர்களை மலச்சிக்கல் பாதித்துள்ளது. இது உலகில் உள்ள பிற பகுதிகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையாக உள்ளது. ஒரு வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவான முறை மலம் கழித்தல், மலம் கழிக்கும் போது வலி, சிரமம், மலம் கழித்த பிறகும் வயிறு காலி ஆகாத ஒரு உணர்வு போன்றவை மலச்சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. விளக்கெண்ணெயில் காணப்படும் ரிஸினோலிக் அமிலம் என்ற அன்சாச்சுரேட்டட் ஒமேகா-9 கொழுப்பு அமிலம் மலமிளக்கியாக செயல்படுகிறது. இந்த அமிலம் குடலில் உள்ள தசைகளை தூண்டி மலத்தை எளிதாக வெளியேற்றுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 68

    0

    0

    Leave a Reply