ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2024, 7:44 pm
புஷ்பா 2 திரைப்பட கூட்ட நெரிசல் தொடர்பான விவகாரம் பெரிதாக உருவெடுத்துள்ள நிலையில் இன்று தெலுங்கானா திரைப்பட அபிவிருத்தி கழக தலைவர் தில்ராஜ் தலைமையில் திரைத்துறை பிரபலங்கள் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்
அப்போது டாலிவுட்டிற்கு அரசு வழக்கம்போல் எப்போதும் ஆதரவாக இருக்கும் இன்று முதல்வர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: பிக் பாஸ் பிரபலத்திற்கு பாலியல் சீண்டல்…சினிமாவில் தொடரும் அட்ஜஸ்ட்மென்ட்..!
அதே நேரத்தில் திரைத்துறையினர் சமூக அக்கறை,பொறுப்பு ஆகியவற்றுடன் செயல்பட வேண்டும் என்றும், தெலுங்கானா மாநிலத்தில் இனிமேல் புதிய படங்கள் வெளியாகும் போது ரசிகர் காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படாது.
திரையுலக பிரபலங்கள் வெளியில் வரும்போது ரசிகர்களை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டியது அந்தந்த பிரபலத்தின் பொறுப்பு என்றும் கூறினார்.
மேலும் பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற பெயரில் பவுன்சர்கள் செய்யும் வேலைகள் மீது தீவிர கவனம் செலுத்தப்படும் என்றும் திரை துறையினர் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆலய சுற்றுலா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுற்றுலா, போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய சமூக அக்கறையுடன் தொடர்புடைய செயல்பாடுகளில் திரைத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று அப்போது கூறி இருக்கிறார் தெலுங்கானா முதல்வர்.