உருளைக்கிழங்கு இல்லாமல் கூட பூரி மசாலா செய்யலாமா!!!
Author: Hemalatha Ramkumar26 December 2024, 7:43 pm
பொதுவாக சப்பாத்தி, பூரி செய்தாலே அதற்கு உருளைக்கிழங்கு மசாலா அல்லது உருளைக்கிழங்கு சேர்த்து குருமா செய்வது வழக்கம். ஆனால் இன்று சற்றும் வித்தியாசமாக உருளைக்கிழங்கு இல்லாத பூரி மசாலா எப்படி செய்யலாம் என்பதை பார்க்க போகிறோம். ஒரு சிலருக்கு உருளைக்கிழங்கு சேர்ப்பது வாயு தொல்லையை ஏற்படுத்தும். இது மாதிரியான சூழ்நிலைகளில் இந்த ரெசிபி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 1
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி – 1 கப்
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 6 பற்கள்
செய்முறை
*முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும்.
எண்ணெய் சூடானவுடன் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
*வெங்காயம் சாஃப்டாக வதங்கி வந்தவுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.
*இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து வதக்குங்கள்.
*இப்போது மூடி போட்டு ஓரிரு நிமிடங்களுக்கு தக்காளியை வேக வைத்துக் கொள்ளலாம்.
*அடுத்ததாக மசாலா பொடிகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
*பின்னர் பட்டாணி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
இதையும் படிச்சு பாருங்க: விஷமாக மாறி உயிரை கூட காவு வாங்கும் அளவுக்கு அதிகமான தண்ணீர்!!!
*தண்ணீர் கொதித்த உடன் ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீரில் கடலை மாவை கரைத்து அதனையும் சமைத்துக் கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவில் சேர்த்துக் கொள்ளலாம்.
*அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு மசாலா பரிமாறுவதற்கு தயாராக உள்ளது.