அவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!

Author: Selvan
26 December 2024, 9:48 pm

விடுதலை 2 – OTT தேதி அறிவிப்பு

சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில்,அதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டுள்ளார் வெற்றிமாறன்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.டிசம்பர் 20 ஆம் தேதி தியேட்டரில் வெளியான விடுதலை-2 ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Viduthalai 2 OTT platform

படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக காட்டப்பட்டுள்ளதால் இது கமர்சியல் படமாக அமையவில்லை.ஆனால் படத்தில் சொல்ல வந்த கருத்துக்களை ஆழமாக,மக்களுக்கு புரியும் படி அருமையாக எடுத்துள்ளார் வெற்றிமாறன்.

இதையும் படியுங்க: பிக் பாஸ் பிரபலத்திற்கு பாலியல் சீண்டல்…சினிமாவில் தொடரும் அட்ஜஸ்ட்மென்ட்..!

விடுதலை 2 வில் வாத்தியாராக நடித்த விஜய்சேதுபதி அவருடைய பின்னணி என்ன அவருக்கும் மஞ்சு வாரியாருக்கும் இடையே காதல் எப்படி மலர்ந்தது என காட்டியிருப்பார்.இதுவரை 36 கோடி வசூலை குவித்து,தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் OTT அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தின் உரிமையை பிரபல ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது.அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி OTT-யில் வெளியாகலாம் என தகவல் வந்துள்ளது.தியேட்டரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கூட டெலீட் செய்த காட்சிகளும் சேர்த்து OTT-யில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 48

    0

    0

    Leave a Reply