அட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!

Author: Selvan
27 December 2024, 1:42 pm

அனிருத் இசையில் கலக்கலாக வெளிவந்த பாடல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் அசத்தலாக உருவாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.இப்படத்தில் அஜித்துடன் திரிஷா,அர்ஜுன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Vidamuyarchi Sawadeeka Song

நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில்,இப்படம் எப்போ வெளியாகும் என காத்திருந்த நிலையில்,படக்குழு வரும் பொங்கல் அன்று திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக சொன்னது.இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் வெளியான படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் Sawadeeka பாடலின் லிரிக் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என படக்குழு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று அறிவித்திருந்தது.

இதையும் படியுங்க: “முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!

அதன்படி தெருக்குறள் அறிவு வரிகளில்,ஆண்டனி தாசன் குரலில்,அனிருத் இசையில் அற்புதமாக வெளிவந்திருக்கும் Sawadeeka பாடலை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

மேலும்,பாடலின் லிரிக் விடீயோவை இன்று மாலை 5.05-க்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.பாடலில் நடுவில் ரசிகர்கள் மத்தியில் சமீப காலமாக ட்ரெண்ட் ஆன “இருங்க பாய்” வசனத்தை சேர்த்து மஜா பண்ணி இருக்கிறார் அனிருத்,இதனால் பாடலின் லிரிக் விடீயோவை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 112

    0

    0

    Leave a Reply