ரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2024, 1:53 pm
ரஜினி மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த படம் தளபதி. பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தளபதி படம் இன்றளவும் எவர்கிரீன் படமாக உள்ளது.
அண்மையில் கூட ரஜினி பிறந்தநாளுக்காக தளபதி படம் ரீரிலிஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடினா. ஆனால் ரஜினியுடன் நடிக்க மீண்டும் மம்முட்டிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படியுங்க: ரொமாண்டிக் ஆக மாறிய பிக் பாஸ் வீடு.. அருணை கட்டிப்பிடித்து அழுத அர்ச்சனா!
அதாவது, 1995ல் வெளியான பாட்ஷா படம் மிகப்பெரிய பிரம்மாண்ட் வெற்றியை பதிவு செய்து தமிழ் சினிமாவை உற்று நோக்க செய்தது. நக்மா, ரகுவரன் என பலரும் நடித்த இந்த படம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
இந்த படத்தில் ரஜினியின நண்பனாக நடித்திருப்பார் சரண் ராஜ். அன்வர் பாஷா என்ற அந்த கதாபாத்திரம்தான், மாணிக்கம் பாட்ஷாவாக மாறுவதற்கு விதை போட்டது.
அன்வர் பாஷா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா முதலில் மம்முட்டியை தான் தேர்வு செய்தார். ஆனால் ஏற்கனவே தளபதி படத்தில் இருவரும் நடித்துவிட்டோம் என மம்முட்டி நடிக்க ரஜினி எதிர்த்ததால், சரண் ராஜ் நடித்தாக விக்கிபீடியாவில் இந்த தகவல் உள்ளது.