சென்சிடிவ் சருமத்திற்கு இந்த பொருள் கண்டிப்பா வொர்க்-அவுட் ஆகும்!!!

Author: Hemalatha Ramkumar
27 December 2024, 6:18 pm

தேன் என்பது நம்முடைய சுவை மொட்டுகளை திருப்திப்படுத்தும் ஒரு இனிப்பாக மட்டுமல்லாமல், நமது சரும பராமரிப்பு வழக்கத்திற்கு ஒரு அற்புதமான பொருளாகவும் அமைகிறது. அதன் இயற்கையான ஆற்றும் பண்புகள் காரணமாக தேன் நம்முடைய சருமத்தை பல வழிகளில் மாற்றுகிறது. அந்த வகையில் தேனை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

சென்சிடிவ் சருமத்தை ஆற்றுகிறது 

ஒருவேளை உங்களுக்கு சென்சிட்டிவ் சருமம் இருந்தால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான புராடக்டுகளை தேர்வு செய்வதில் நீங்கள் சிரமப்பட வேண்டும். எனினும் தேன் உங்கள் சருமத்தில் மென்மையாக செயல்பட்டு, ஆற்றும் பண்புகளை கொண்டுள்ளது. இதிலுள்ள இயற்கையான வீக்க எதிர்ப்பு பண்புகள் சருமத்தை அமைதிப்படுத்தி, எரிச்சல் மற்றும் சிவத்தலை போக்குகிறது. இதனால் இது சென்சிடிவ் சருமத்திற்கு ஏற்ற ஒரு புராடக்ட் ஆக இருக்கிறது. தேனை முகத்தில் தடவுவதன் மூலமாக நீங்கள் உடனடி நிவாரணம் பெறலாம். இது சருமத்தை மென்மையாகவும், சமநிலையாகவும் வைக்கிறது.

மாய்ஸரைசர் 

வறண்ட சருமம் இருந்தால் உங்களுடைய முகம் பார்ப்பதற்கே டல்லாகவும், சோர்வாகவும் இருக்கும். ஆனால் தேனை முகத்திற்கு பயன்படுத்துவது காற்றில் இருந்து ஈரப்பதத்தை உங்கள் சருமத்திற்கு உறிஞ்சி கொடுத்து அதனை ஈரப்பதமாக வைக்கும். தேனை முகத்தில் தடவுவதன் மூலமாக தோலில் உள்ள ஈரப்பதம் லாக் செய்யப்பட்டு, சருமம் மென்மையாக அதே நேரத்தில் போஷாக்கு நிறைந்ததாக மாறும். மேலும் தேன் அடைப்பட்ட சரும துளைகளை சரி செய்து முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்களை மறைய வைக்கிறது. இதனால் உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.

முகப்பரு 

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது முகப்பருவால் பாதிக்கப்பட்டுள்ள தோலுக்கு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கிறது. இது பாக்டீரியாவை எதிர்த்து போராடுவதன் மூலமாக சருமத்தை ஆற்றி பருக்களை போக்குகிறது. தேனானது தோலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரித்து, முகப்பருவிற்கான சரியான ஒரு ப்ராடக்டாக அமைகிறது.

இதையும் படிக்கலாமே:  தலைவலி தானேனு அசால்ட்டா இருக்காதீங்க … கண்ணுல இந்த பிரச்சினை இருந்தாக்கூட அப்படி வரலாம்!!!

தழும்புகள் மற்றும் கறைகள் 

தேன் ஒரு இயற்கை குணப்படுத்தும் பொருளாக செயல்படுகிறது. சருமத்தின் சரி செய்யும் செயல்முறையை விரைவுபடுத்தி தழும்புகள் மற்றும் கறைகளை விரைவாக குறைக்கிறது. தேனில் வீக்க எதிர்ப்பு, ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நுண்ணுயிரி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவுகிறது. இதற்கு நீங்கள் தினமும் வடுக்கள் மீது தேனை தடவ வேண்டும்.

எக்ஸ்ஃபோலியேஷன் 

தேன் என்பது இயற்கையான அதே நேரத்தில் மென்மையான ஒரு எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்பட்டு சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி எரிச்சலை போக்குகிறது. முழுக்க ஆன்டி-ஆக்சிடன்ட்களால் நிரப்பப்பட்ட தேன் சருமத்திற்கு தேவையான போஷாக்கையும், ஈரப்பதத்தையும் வழங்கி அதனை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. மேலும் இது சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கும் ஒரு அற்புதமான எக்ஸ்ஃபோலியேட்டராக அமைகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?