என் தலைவன் சாட்டையால் அடித்துக்கொள்வது ஜீரணிக்க முடியவில்லை : நடிகை கஸ்தூரி!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2024, 7:58 pm

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக இன்று காலை 10 மணிக்கு கோவையில் அண்ணாமலை தனது வீட்டு முன் நின்று, தானே சாட்டையால் ஆறு முறை, அடித்து கொண்டார்.

இதையும் படியுங்க: ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளியா? அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிபதிகள்!

அப்போது பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பா.ஜ.,வினர் வெற்றி வேல், வீர வேல்’ என கோஷம் எழுப்பினர். இது குறித்து திமுகவினர் அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி ஆதரவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் X தளப்பதிவில். என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளுவதை பார்க்க முடியவில்லை. அண்ணாமலையின் வழி அனைவரின் வலியானால், தமிழகம் அரசீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

  • Samuthirakani interview மிஷ்கினை பற்றி உங்களுக்கு என்னங்க தெரியும்…நடிகர் சமுத்திரக்கனி ஆவேசம்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu