ஆன்லைனில் வாங்கிய கடன்.. தவணை செலுத்தாத பெண்ணை மார்பிங் செய்து மிரட்டிய இருவர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2024, 2:09 pm

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.

இவர் தனிப்பட்ட அவசர தேவைக்காக பின்னேபுல் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். இதற்கான 5 தவனைகள் கட்டிய நிலையில் 6 வது தவனை கட்ட காலதாமதம் ஆனதால் அந்த பெண்ணிற்கும் அவரது அம்மாவிற்கு போன் செய்து மிரட்டி மார்பிங் செய்த நிர்வாண போட்டோ அனுப்புவதாக கூறியுள்ளனர்.

மேலும் அவரது சகோதரருக்கு மார்பிங் செய்த போட்டோ அனுப்பினர் இதனால் அவர்கள் சூலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக புகார் பெற்ற போலீசார் கடன் வசூல் செய்ய நிபந்தனையின்படி செய்ய வேண்டும்.

இதையும் படியுங்க: முதலிரவு முடிந்தால் அவ்வளவுதான்.. ஆதார் கார்டால் வெளிவந்த உண்மை!

அதைவிட்டு மார்பிங் புகைப்படன் அனுப்பி மிரட்டல் செய்ததால் அந்நிறுவனத்தை சேர்ந்த இருவதை கைது செய்துள்ளோம்.

எனவே பொது மக்கள் வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக கடன் தருவதாக கூறுவதை நம்பி கடன் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2 Arrest after Threatening Woman to Morphing his Photo for not paid Online Loan

தவிர்க்க முடியாமல் வாங்கினால் இதுபோன்று சைபர் குற்றவாளிகள் குறித்து தெரிந்தால் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் சைபர் குற்றவாளிகள் வீசும் வளையில் விழுந்து பணத்தை இழக்க வேண்டாம் என மாவட்ட எஸ்.பி. சுப்பாராயுடு தெரிவித்தார்

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 105

    0

    0

    Leave a Reply