நடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
Author: Selvan28 December 2024, 4:38 pm
ஓவியாவின் அண்ணனாக நடிக்க இருந்த விமல்!
தமிழ் சினிமாவில் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விமல்.இவர் சமீபத்தில் ஓவியாவை பற்றி ஒரு தகவலை கூறியுள்ளார்.
அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் களவானி.இப்படத்தில் விமல்,ஓவியா,கஞ்சா கருப்பு என பலர் நடித்திருப்பார்கள்.
படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு,விமலுக்கும் ஓவியாக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள்,களவானி படத்தின் மூலம் கிடைத்தன.இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடி ஓவியாவின் அண்ணனாக விமலை நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்க: கேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
அப்போது விமல் பசங்க படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார்,அந்த சமயத்தில் பசங்க பட தயாரிப்பாளரும்,களவானி பட தயாரிப்பாளரும் எதார்த்தகமாக சந்தித்து விமலை பற்றி பேசியுள்ளனர்.
அதன்பின்பு தான் களவானி படத்தின் தயாரிப்பளார் நசீர் விமலை ஹீரோவாக நடிங்க என்று சொல்லியுள்ளார்.இந்த தகவலை சமீபத்திய பேட்டியில் விமல் சுவாரசியமாக பகிர்ந்திருப்பார்.