தனியார் விடுதியில் 4 சடலங்கள்.. செல்போனில் மர்மம் : அதிர்ச்சியில் திருவண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan28 December 2024, 4:29 pm
திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்கள் மீட்ட போலீசார், விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் ஸ்ரீ மகாகால வியாசர் வயது 45, ருக்மணி பாய் வயது 40, இவர்கள் இருவரும் கணவன் மனைவி. இவர்களது மகள் ஜலந்தரி வயது 17, மகன் முகுந்த் ஆகாஷ் குமார் வயது 15 ஆகிய நான்கு பேரும் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள டிவைன் பார்ம் ஹவுஸ் விடுதியில் தங்கியுள்ளனர்.
தனியார் பார்ம் ஹவுஸ் நேற்று மாலை 6 மணி அளவில் உள்ள ஊழியர்கள் சந்தித்து நாளையும் அறை வேண்டுமென கூறியுள்ளனர்.
அதன் பிறகு இன்று காலை 11 மணியளவில் ஃபார்ம் ஹவுஸ் ஊழியர்கள் வந்து பார்த்த பொழுது அறை உள்புறமாக தாழிட்டு இருந்தது.
ஊழியர்கள் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது 4 பேர் இறந்த நிலையில் இருந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை அவர்களிடம் இருந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து விசாரித்த போது, இவர்கள் சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர்கள் என்றும் ஸ்ரீ மகா கால வியாசர் வயது 45, அவரது மனைவி ருக்மணி பாய் வயது 40, மகள் ஜலந்தரி வயது 17, மகன் ஆகாஷ் குமார் வயது 15 தற்கொலை செய்து கொண்டவர்கள் இவர்கள் நான்கு பேர் என்று தெரியவந்தது.
இதையும் படியுங்க: காய்ச்சலுக்கு மெடிக்கல் கடையில் ஊசி போட்ட இளைஞர் திடீர் மரணம்.. விசாரணையில் பகீர்!
இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்து சில நாட்கள் திருவண்ணாமலையிலேயே தங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட என்பதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா முடிந்து இவர்கள் அனைவரும் சென்னைக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அண்ணாமலையார் மற்றும் மகாலட்சுமி அழைப்பதாக கூறி திருவண்ணாமலை முக்தி அடைவதற்காகவே நேற்று திருவண்ணாமலைக்கு வந்தது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அவர்கள் இதுகுறித்து தெளிவாக கடிதம் எழுதி வைத்துள்ளனர். மேலும் தனது செல்போனில் காணொளி வாயிலாகவும் தற்கொலை குறித்து முக்தி அடையும் நோக்கத்தில் தான் தற்கொலை செய்து கொண்டதாக வீடியோ பதிவுகளையும் செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தனது மகன் மற்றும் மகள் ஆகியோர் முழு ஒத்துழைப்புடன் தான் இந்த தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர்.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரக்கூடிய இத்திருத்தளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திருவண்ணாமலையில் தங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.