விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… 2025ஆம் ஆண்டு ரெண்டு பரிசு காத்திருக்கு!
Author: Udayachandran RadhaKrishnan28 December 2024, 5:33 pm
விஜய் தனது 69வது படத்தை கடைசி படம் என அறிவித்துள்ளார். இந்த படம் 2025ஆம் ஆண்டு அக்டோபா மாதம் வெளியாக உள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்க: லக்கி பாஸ்கர் இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டம்.. சூர்யாவுக்கு லக்கோ லக்!
விஜய் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் வருததத்தில் உள்ளனர். இருந்தாலும் அவர் அரசியலுக்கு வருவதால் ஒரு பக்கம் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 2025 ஏப்ரலில் விஜய் நடித்த சச்சின் படம் ரீரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எஸ் தாணு முடிவு செய்துள்ளார். கடந்த இந்த படம் 2005ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
#ThalapathyVijay's blockbuster film #Sachien is set for a grand re-release in April 2025, marking its 20th anniversary! – Producer Kalaipuli Thanu!pic.twitter.com/dPC9NqOTbD
— Digi Star (@TheDigiStar) December 27, 2024
படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனதையொட்டி, இந்த படத்தை ரிலீஸ் செய்தவாக அறிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.