ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி…வெளிவந்த அறிக்கையால் பரபரப்பு..!
Author: Selvan28 December 2024, 7:53 pm
விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு தடை
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்து பின்பு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் விஜய் ஆண்டனி.
இவருடைய பாடல் வரிகள் ஆடாதவரை கூட ஆட வைக்கும்,அந்த அளவிற்கு புரியாத வார்த்தைகளை பயன்படுத்தி,பெரும்பாலான குத்து பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர்.
இவர் சமீப காலமாக இசையை தவிர்த்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி,சலீம்,பிச்சைக்காரன் என பல ஹிட் படங்களை கொடுத்தார்.சமீபத்தில் இவரது பெண் குழந்தை தற்கொலை செய்து இறந்த காரணத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
அதில் இருந்து மன தைரியத்துடன் வெளியே வந்து பல பொது நிகழ்ச்சிகளிலும்,பல தனியார் சேனலுக்கு பேட்டியும் அளித்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் சமீப காலமாக அனிருத்,ஜி வி பிரகாஷ், ஏ.ஆர் ரகுமான் தங்களுடைய லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி நடத்தி ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,விஜய் ஆண்டனியும் லைவ் கான்செர்ட் நடத்தி வந்தார்.
இதையும் படியுங்க: நீ இல்லாமல் நான் எப்படி வாழ…மனம் உடைந்த திரிஷா…வைரலாகும் பதிவு…!
அதன்படி,இன்று மாலை சென்னையில் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி நடத்த போவதாக அறிவிப்பு செய்திருந்தார்.இதனால் ரசிகர்கள் ரொம்ப ஆவலுடன் இசை நிகழ்ச்சியை காண டிக்கெட்களை புக் செய்து,பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் இசை நிகழ்ச்சி நடத்த சென்னை போலீஸாரிடம் இருந்து அனுமதி கொடுக்கவில்லை.எங்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும்,போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
— vijayantony (@vijayantony) December 28, 2024
இதனால் வேறு ஒரு தேதிக்கு மாற்றம் செய்திருக்கிறேன்,இதற்காக நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என தன்னுடைய X-தளத்தில் விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.