ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!

Author: Selvan
28 December 2024, 9:59 pm

பிரம்மாண்டமாக ரம்ஜான் அன்று வெளியாகும் சிக்கந்தர்!

தமிழ் திரையுலகில் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ஏ ஆர் முருகதாஸ்.அதன்பின்பு விஜயகாந்த்,விஜய்,சூர்யா போன்ற முன்னணி நடிர்களை வைத்து தமிழ் சினிமாவிற்கு பல ஹிட் படங்களை கொடுத்தார்.

இதையும் படியுங்க: அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!

இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து SK23 படத்தை இயக்கி வருகிறார்.இந்த நிலையில் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படம் இயக்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

AR Murugadoss direct Salman Khan Sikandar movie

பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில்,படம் அடுத்த வருடம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.இந்த நிலையில் நேற்று சல்மான் கானின் பிறந்த நாளையொட்டி,இன்று மாலை சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டது.

அதன் படி படத்தின் டீஸர் மிரட்டலாக வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.கடந்த வருடம் அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்த மாதிரி,ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து பிளாக்பஸ்டர் கொடுப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

  • Ajith 102 fever shooting dedication “SAWADEEKA”பாடலுக்கு அஜித் செய்த தியாகம்…கல்யாண் மாஸ்டர் சொன்ன தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!
  • Views: - 74

    0

    0

    Leave a Reply