வேலையை விட்ட நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை.. ஆந்திர அரசு கொடுத்த அதிர்ச்சி!

Author: Hariharasudhan
29 December 2024, 10:44 am

சதம் கண்ட இளம் இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மெல்போர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும், பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நின்றது இந்திய அணி. அப்போதுதான் 8வது வீரராக நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார்.

21 வயதான இந்த இளம் வீரர், இந்திய அணியின் இக்கட்டான நிலையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 50 ரன்களைக் குவித்தார். இதனை, ‘புஷ்பா’ பட பாணியிலும் நிதிஷ் குமார் கொண்டாடினார். இதனையடுத்து, தனது முதல் டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார் நிதிஷ் குமார் ரெட்டி.

இதனையடுத்து, 4-வது நாள் ஆட்டத்தில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது நிதிஷ்குமார் ரெட்டி ஆட்டமிழந்தார். இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனிடையே, சதம் எடுக்க ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், நிதிஷ் குமாரின் தந்தை முதாய்லா ரெட்டி, தனது கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்த தருணம், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Nitish Kumar reddy father emotional

மேலும், சதம் அடித்த பிறகு, மைதானத்தில் இருந்த அவரது தந்தையிடம், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் இருந்த ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி காண வந்தார். அப்போது பேசிய நிதிஷ் குமாரின் தந்தை, “எங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இதையும் படிங்க: வெடித்துச் சிதறிய போயிங் விமானம்.. 62 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

14-15 வயது முதலே நன்றாக அவன் ஆடி வந்தான். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடுகின்றான். உண்மையிலேயே இந்த நாள் ஒரு சிறப்பான நாள் தான், சிறப்பான உணர்வைத் தந்த நாளும் தான்” என்றார். தொடர்ந்து, 99 ரன்களில் இருந்த போது உங்கள் உணர்வுகள் என்ன என்று கேட்டபோது, “ஒரே டென்ஷன் டென்ஷன் டென்ஷன்.. ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது, நல்ல வேளை சிராஜ் நின்றார்” என ஆனந்தக் கண்ணீருடன் கூறினார்.

இதனையடுத்து, முதாய்லா ரெட்டி தனது வேலையை விட்டதாக வெளியான பதிவு ஒன்றிற்கு, ‘இது உங்களுக்கானது அப்பா’ என நெகிழ்ச்சியுடன் நிதிஷ் குமார் ரெட்டி பதிலளித்துள்ளார். மேலும், சதம் பதித்த நிதிஷ்குமார் ரெட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைவழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 58

    0

    0

    Leave a Reply