வாழப்பழத்த ஊட்ட முடியாது.. ரசிகர்களை சீண்டி பார்த்த பாலா!

Author: Hariharasudhan
29 December 2024, 1:00 pm

ரசிகர்களுக்கு நாம் கொடுக்க மட்டுமே வேண்டும், படைப்பாளியை விட ரசிகர்களுக்கு அதிக அறிவு இருக்கிறது என இயக்குநர் பாலா கூறியுள்ளார்.

சென்னை: திரைப்பட இயக்குநர் பாலா, யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் பேசிய அவர், “பாலுமகேந்திரா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று இதுதான். ஒருவன் பசி என்று கூறினால், அவனுக்கு வாழைப்பழத்தைக் கொடு, அவனால் உரித்து திங்க முடியாத நிலையில் இருக்கிறானா?

அப்படியென்றால், வாழைப்பழத்தை உரித்து கொடு, அதை விட்டுவிட்டு வாழைப்பழத்தை ஏன் ஊட்டி விடுகிறாய்? அது அவனுடைய வேலை. அதற்கான அவசயமும் அங்கு இல்லை. அவனுக்கென்று அறிவு இருக்கிறது. எனவே, அவன் அதனைச் செய்து கொள்வான்.

நீ (பாலா) 10 படங்களோ, 15 படங்களோ எடுக்கிறாய், ஆனால், ரசிகனான அவன் நூற்றுக்கணக்கான படங்களைப் பார்க்கிறான். எனவே, உன்னை விட அவனுக்கு தான் அறிவு அதிகம். படம் எடுக்கும் இயக்குநர்களை விட, ரசிகர்களே மிகச் சிறந்த படைப்பாளி.

Bala about Fans Knowledge

நூறு படம் பார்க்கும் அவன் மிகவும் எளிதாக எங்கு தவறுகள் உள்ளது எனக் கண்டுபிடித்து விடுவான். எனவே, ரசிகர்களை அவ்வளவு எளிதாக நாம் ஏமாற்றிவிட முடியாது. நீ (இயக்குநர்கள்) சொல், நான் (ரசிகர்கள்) புரிந்துகொள்வேன் என்பதே நியதி. அதேநேரம், ரசிகர்களுக்கு கிளாஸ் எடுக்கவும் முடியாது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குடியரசு தின பதக்கம் பெற்ற காவலர் குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!

பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாக இருக்கிறது. முன்னதாக, இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், அது இருவர் ஒத்துழைப்போடே நடைபெற்றது என்றும் சமீபத்தில் பாலா விளக்கம் அளித்திருந்தார்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 78

    0

    0

    Leave a Reply