சிக்கன் ரைஸால் வந்த வினை.. 3 பேர் துடிதுடித்த அந்த நொடி!

Author: Hariharasudhan
29 December 2024, 6:46 pm

ஈரோடு அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகர் – அமுதா தம்பதி. இவர்களது மகள் நீலாம்பரி. இந்த நிலையில், திடீரென இவர்கள் 3 பேரும், நேற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காரணம் கேட்டதற்கு, கடுமையான வயிற்று வலி எனக் கூறி உள்ளனர். பின்னர், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு, கருங்கல்பாளையத்தில் இயங்கி வந்த ஒரு ஹோட்டலில் ‘சிக்கன் ரைஸ்’ வாங்கி, 3 பேரும் பகிர்ந்து சாப்பிட்டு உள்ளனர்.

பின்னர், மறுநாள் முதல் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதாகவும், 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என்பதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறி உள்ளனர்.

Chicken rice ate family under treatment in Erode

மேலும், இது குறித்து மருத்துவர்கள் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருங்கல்பாளையத்துக்குச் சென்று, சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை நடத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: தனது பெண் ஊழியரை பாலியல் இச்சைக்கு அழைத்த நாதக நிர்வாகி.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

அப்போது, அங்கு உணவக சமையல் அறை சுகாதாரம் அற்ற முறையில் இருந்ததும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த ஹோட்டல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெறாமல் இயங்கியதும், இறைச்சி மற்றும் மூலப்பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, கழிவு எண்ணெய் தொடர்பான நடைமுறைகள், உணவு கையாள்வதற்கான மருத்துவ தகுதிச் சான்று என்ற எந்த முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 54

    0

    0

    Leave a Reply