கோவை மாநகர காவல் ஆணையராக சரவண சுந்தர் நியமனம்.. அடுத்தடுத்து நடந்த மாற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2024, 11:41 am

கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Coimbatore New Commissioner Sarava Sundar

அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வரும் சரவண சுந்தர் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையும் படியுங்க: கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?

அதுபோன்று கோவை மாநகர வடக்கு துணை ஆணையராக பணியாற்றி வரும் ஸ்டாலின் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு பதிலாக சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தேவநாதன் கோவை மாநகர வடக்கு துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Coimbatore New Commissioner

கோவை மாநகரத்திற்கு துணை ஆணையர் சரவணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை தெற்கு மண்டலம் பொருளாதார குற்றப்பிரிவில் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது தவிர தமிழகத்தில் மொத்தம் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 150

    0

    0

    Leave a Reply