தில் ராஜுவின் மாஸ் வசனம்…”கேம் சேஞ்சர்” ப்ரோமோஷன் விழாவில் நடந்த கலகலப்பு…!

Author: Selvan
30 December 2024, 1:51 pm

தில் ராஜுவின் “பாட்டு வேணுமா?” வசனம் மீண்டும் ட்ரெண்ட்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர்.இப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில்,படத்திற்கான ப்ரோமஷன் வேலைகளை படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.

Game Changer Viral Event

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையை தான் ஷங்கர் இயக்கியுள்ளார்.ஷங்கர் என்று சொன்னாலே,அப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் இருக்கும்,அந்த வகையில் இப்படத்தில் வரும் பாடல்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட 75 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல் வந்தன.

இதையும் படியுங்க: இரவு பார்டியில் தலைக்கேறிய போதை… வாரிசு நடிகர், நடிகைகள் தள்ளாடிய காட்சி!

படக்குழு சமீபத்தில் அமெரிக்கா சென்று படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி எல்லாம் நடத்தியது.இந்த நிலையில் நேற்று நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பளரான தில் ராஜு தனது ஸ்டைலில் பேசி அசத்தினார்.அதாவது இவர் வாரிசு திரைப்படத்தின் போது நடைபெற்ற ப்ரோமோஷன் விழாவில் “பாட்டு வேணுமா பாட்டு இருக்கு…ஃபயிட் வேணுமா ஃபயிட் இருக்கு”..என்ற வசனத்தை பேசி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனார்.

அந்த வகையில் தற்போது கேம் சேஞ்சர் படத்திற்கும் அதே வசனத்தை பேசி அங்கே இருந்த பிரபலங்களை சந்தோசப்படுத்தினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்காக இதுவரை இல்லாத அளவிற்கு 256 அடியில் ராம் சரணின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.இப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 115

    0

    0

    Leave a Reply