ஞானசேரகனை கட்சி விட்டு நீக்கவே இல்ல.. எப்படி இப்படி பேசறீங்க முதல்வரே? அண்ணாமலை சாடல்!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2024, 1:13 pm

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு ஆண் கல்வியில் நுழைத்தால் கல்விக்கு வளர்ச்சி, பெண் நுழைந்தால் அது சமூகப் புரட்சி என கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார்.

இதையும் படியுங்க: பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண் பாலியல் பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய சர்ச் ஊழியர் கைது!

கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?

Annamalai Criticized CM Stalin

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 118

    0

    0

    Leave a Reply