தங்கங்களா..அண்ணன் உங்களுக்கு பாம்பு ஷோ காட்ட போறேன் : வைரலாகும் TTFவாசன் வீடியோ.!

Author: Selvan
30 December 2024, 4:39 pm

செல்லப்பிராணியாக பாம்பு: வாசனின் புதிய அவதாரம்

தமிழ் இளைஞர்களிடம் தன்னுடைய பைக் சாகச மூலம் பிரபலம் ஆனவர் TTFவாசன்.இவர் தொடர்ந்து தன்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பைக் சாகச விடீயோக்களை வெளியிட்டு வந்தார்.

TTF Vasan snake Viral Instagram Video

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும்,பல இளைஞர்கள் இவருக்கு ஆதரவாக இருக்கின்றனர்.பல முறை இவர் பொது இடங்களில் வரம்புகளை மீறி பைக் சாகச பண்ணியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதையும் படியுங்க: முதலில் புருஷன்…அப்புறம் தான் ஷூட்டிங்…தயாரிப்பு நிறுவனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நயன்தாரா…!

இந்த சூழலில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புதுசாக பாம்பு ஒன்றை வாங்கி இருப்பதாகவும்,அதனை தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க இருப்பதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனதையடுத்து,வனத்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் அவர் அந்த பாம்பு வீடியோவில் தான் உரிய அனுமதியோடு தான் இந்த பாம்பை நான் வாங்கியுள்ளேன்,சட்டப்படி எல்லாமே செய்து தான் விடீயோவை வெளியிட்டிருக்கிறேன் என்ற தகவலையும் கூறியுள்ளார்.

இவருக்கு இந்த மாதிரி புது புது சிக்கலில் சிக்கி வருவது சமீப காலமாக வாடிக்கையாக உள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 120

    0

    0

    Leave a Reply