உடலில் உள்ள கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவும் சீரக இஞ்சி தேநீர்!!!

Author: Hemalatha Ramkumar
30 December 2024, 3:57 pm

பலர் தங்களுடைய நாளை வெறும் வயிற்றில் ஒரு கப் வெதுவெதுப்பான பானத்தோடு ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது காபி முதல் பல்வேறு வகையான தேநீர்கள் வரை வேறுபடும். ஒரு கப் ஹெர்பல் டீ அல்லது டீடாக்ஸ் தண்ணீரோ, எதுவாக இருந்தாலும் பல்வேறு நபர்கள் பல்வேறு வகையிலான பானங்களை குடிப்பதற்கு விரும்புகின்றனர். இவற்றில் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பலன் தரக்கூடியது சீரக இஞ்சி தேநீர். சீரகம் என்பது வீக்க எதிர்ப்பு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நுண்ணுயிரி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனதால் இது சிறந்த முறையில் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் வீக்க எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு குமட்டல் மற்றும் வீக்கத்தை போக்குகிறது. இதனால் இது உடல் எடையை குறைப்பதற்கு ஒரு அற்புதமான பானமாக அமைகிறது.

இந்த பானத்தை தயாரிப்பதற்கு 1.5 டம்ளர் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சீரகம் ஃபிரஷ்ஷாக துருவிய இஞ்சியை சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளர் வரை வற்றி வந்த உடன் வடிகட்டி பருகலாம். உடல் எடை குறைப்பு பலன்களை தவிர இந்த சீரக இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிப்பதால் இன்னும் பல்வேறு விதமான நன்மைகள் நிகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: நாள்பட்ட சளி, இருமலையும் மூன்றே நாட்களில் குணப்படுத்தும் திப்பிலி ரசம்!!!

செரிமானத்திற்கு உதவுகிறது 

இது செரிமானத்தை தூண்டி வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் தருகிறது. வீக்க எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சீரக விதைகள் செரிமான பாதையை ஆற்றுகிறது. அதே நேரத்தில் இஞ்சியின் சூட்டு விளைவு ஊட்டச்சத்து உறிஞ்சதலுக்கு உதவி, ஆரோக்கியமான குடலையும், செரிமானத்தையும் அளிக்கிறது.

பசியை கட்டுப்படுத்துகிறது 

சீரக இஞ்சி தேநீர் பசியை கட்டுப்படுத்துவதன் மூலமாக உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. சீரக விதையில் உள்ள நார்ச்சத்தும், இஞ்சியில் உள்ள பசியை கட்டுப்படுத்தும் பொருட்களும் இணைந்து நம்முடைய உணவுக்கு ஒரு ஆரோக்கியமான கூடுதலாக அமைகிறது.

வயிற்று உப்புசத்தை போக்குகிறது 

இந்த டீடாக்ஸ் பானம் வயிற்று உப்புசத்தில் இருந்து நிவாரணம் அளித்து, உடலில் உள்ள அதிகப்படியான கழிவுகளையும், நச்சுகளையும் அகற்றுகிறது. அதே நேரத்தில் இஞ்சியில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைத்து தட்டையான வயிற்றை அளித்து, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

உடலை சுத்தம் செய்கிறது

இந்த அற்புதமான தேநீர் ஒரு இயற்கை டீ-டாக்ஸிஃபையராக செயல்பட்டு உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது. சீரக விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலை செய்கிறது. அதே நேரத்தில் இஞ்சியில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் நம்முடைய உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மீட்டமைக்கிறது.

சர்க்கரை அளவுகளை சீராக்குகிறது

ஆரோக்கியமான இன்சுலின் செயல்பாட்டுக்கு உதவுவதன் மூலமாக இது ரத்த சர்க்கரை அளவுகளை சமநிலை செய்கிறது. சீரக விதைகளில் உள்ள ஆன்டி-டயாபெட்டிக் பண்புகள் குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை சீராக்குகிறது. மேலும் இஞ்சியில் உள்ள ஆக்டிவ் காம்பவுண்டுகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 105

    0

    0

    Leave a Reply