விஜய் ஆளுநரைச் சந்தித்ததில் இவ்வளவு அரசியலா? தவெகவின் இந்த பாய்ச்சல் எப்படி?

Author: Hariharasudhan
30 December 2024, 6:02 pm

விஜய், ஆளுநரைச் சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை பாராட்டியது அரசியல் கவனம் பெற்றுள்ளது.

சென்னை: வழக்கமாக, ஆளும் திமுக அரசில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்வதுண்டு. ஆனால், இந்த முறை மற்ற இரு கட்சிகளும் செய்யாத ஒன்றை, தவெக தலைவர் விஜய் செய்துள்ளார்.

ஆம், கட்சி தொடங்கி 11 மாத காலம் முடிவடையும் தருவாயில், முதன் முதலாக தமிழகத்தையே அதிர்வலைக்கு உள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து முக்கிய கோரிக்கையை முன்வைத்து தவெகவினர் ஆளுநரைச் சந்தித்து உள்ளனர்.

விஜய், இந்தச் சம்பவம் நடந்து வெகு நேரத்திற்கு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததால், எக்ஸ் தளத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவரே இன்று ஆளுநரைச் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளையும் வைத்திருப்பது, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உண்டாக்கி உள்ளது.

TVK vijay meets RN Ravi politics

அதேநேரம், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கியது, விஜய்க்கு மிகப்பெரிய எதிர்வினையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சந்திப்பு எடுபடுமா என்றால், இது வழக்கமாக பாஜக செய்வது தான் என சிலர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், அண்ணாமலையும், விஜயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். இதனால், பாஜக பாணியில் விஜய் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்து உள்ளது. ஆனால், பாஜகவை தனது கொள்கை எதிரி எனக் கூறி இருந்தார் விஜய்.

இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் அதிரடி கைது.. லெட்டர் கொடுத்ததாக குற்றச்சாட்டு!

மேலும், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, “கவர்னரைச் சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் டெல்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம். இப்போது தவெக தலைவர் நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்கிறது.

கவர்னர் ரவி அவர்களை, விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் எலைட் அரசியல்” எனத் தெரிவித்து உள்ளார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 96

    0

    0

    Leave a Reply