காப்பாத்துங்க.. நெஞ்சு வலிக்குது : திமுக கவுன்சிலர்கள் இடையே நடந்த மோதலின் போது கதறிய மேயர்!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2024, 7:59 pm

திமுக கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது திடீரென நெஞ்சு வலிக்குது காப்பாத்துங்க என கதறிய மேயரால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சிய மேயராக உள்ளவர் சரவணன். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயராக உள்ளார். இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது.

Kumabakonam Mayor screamed shock at Corporation meeting

அப்பேது கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த கோப்புகள் குறித்து திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேள்விகளை கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாக மேயர் அறிவித்தார்.

இதையும் படியுங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர்.. சிறுமியால் வெளியான தகவல்!

பின் மேயர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் வேகமாக ஓடிச் சென்ற கவுன்சிலர், மேயர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். உடனே அதிர்ச்சியைடந்த மேயர், திடீரென தரையில் படுத்தபடி தனக்கு நெஞ்சு வலிக்குது, காப்பாற்றுங்கள் என அலறினார்.

இதையடுத்து பதறிய கவுன்சிலர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, அறைக்கு அழைத்து சென்றனர். கோப்புகளை கேட்டால் நெஞ்சுவலி மேயர் கூறியது கவுன்சிலர்களிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 87

    0

    0

    Leave a Reply