சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை.. மகள் துப்பட்டாவில் உயிர் பிரிந்த சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2024, 11:18 am

சின்த்திரையில் அதிவேக வளர்ச்சி கண்ட ஒரு நடிகை என்றால் அது சீரியல் நடிகை சித்ராதான். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அசூர வளர்ச்சி கண்டார்.

அந்த ஒரு சீரியல் காரணமாக ரசிகர்கள் படையே உருவானது. இவர் கடநத் 2020ஆம் ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Serial Actress Chitra Father Suicide

ஓட்டலில் இந்த சம்பவம் நடந்த போது உடனிருந்தவர் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத். இதனால் அவர் மீது போலீசார் விசாரணை பாய்ந்தது.

இதையும் படியுங்க: புது வருடத்தில் புதிய சர்ப்ரைஸ்.. குறைந்தது தங்கம் விலை!

கடைசியல் சிறையில் இருந்து விடுதலையான ஹேம்நாத் இந்த வழக்கில் நிரபராதி என கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக விடுவித்தது.

ஆனால் இதை சித்ராவின் தந்தை விடவில்லை. தொடர்ந்து மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

VJ Chitra Father Suicide

சித்ரா மரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர், தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். சித்ராவின் துப்பட்டாவில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சித்ரா மறைந்து 4 வருடத்தில் அவரின் தந்தையும் அதே போல் மரணடைந்திருப்பது குடும்பத்தினர் மற்றும் சித்ராவின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • surya 45 movie villan role act in rj balaji ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
  • Views: - 114

    0

    0

    Leave a Reply