வெயிட் லாஸ் பண்ண தேங்காய் எண்ணெய்யா… ஆச்சரியமா இருக்கே!!!

Author: Hemalatha Ramkumar
31 December 2024, 4:09 pm

தேங்காய் எண்ணெய் என்பது நம்ப முடியாத பல நன்மைகளை தரக்கூடிய ஒரு அற்புதமான எண்ணெய். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் உடல் எடையை கட்டுப்படுத்துவது வரை தேங்காய் எண்ணெய் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. ஆனால் அதே நேரத்தில் தேங்காய் எண்ணெய் தொப்பை கொழுப்பை குறைப்பதற்கும் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை. எனவே உடல் எடையை குறைப்பதற்கு தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையலுக்கு தேங்காய் எண்ணெய் 

உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் வழக்கமாக சமைப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள் என்று அழைக்கப்படும் MCT உள்ளது. இந்த MCT விரைவாக உறிஞ்சப்பட்டு கல்லீரலில் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதனால் வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்பட்டு கொழுப்பு சேமிக்கப்படுவது குறைகிறது. மேலும் தேங்காய் எண்ணெயை உங்களுடைய உணவில் சேர்த்து வர பசி கட்டுப்படுத்தப்பட்டு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் உங்களுடைய மொத்த கலோரி உட்கொள்ளல் குறையும்.

டீடாக்ஸ் பானமாக தேங்காய் எண்ணெய் 

தினமும் நீங்கள் சாப்பிடும் காபி அல்லது ஸ்மூத்தியில் ஒரு கிரீமையான அமைப்பை சேர்ப்பதற்கும், நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதற்கும் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை அதில் சேர்க்கலாம். எனினும் மிதமான அளவு சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட தின்பண்டங்கள் 

சாதாரண எண்ணெயில் பொரிக்கப்பட்ட தின்பண்டங்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களுக்கு மாறுங்கள். இது ஆரோக்கியமான ஆப்ஷனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

எனர்ஜி பூஸ்டர் 

நீங்கள் தேங்காய் எண்ணெயை வொர்க்அவுட் செய்வதற்கு முன்பு ஒரு எனர்ஜி பூஸ்டராக பயன்படுத்தலாம். இதற்கு உடற்பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை சாப்பிடுங்கள். இது உங்களுடைய வொர்க் அவுட்டுக்கு ஒரு எரிபொருளாக செயல்படும்.

இதையும் படிக்கலாமே : குளிர் காலம் தானே… ஒரு நாள் குளிக்கலானா என்ன ஆகப்போகுதுன்னு அசால்ட்டா இருந்துடாதீங்க… அது ரொம்ப டேஞ்சர்!!!

சாலட் டிரெஸ்ஸிங்கில் பயன்படுத்தவும் 

சாலட் என்பது உடல் எடையை குறைப்பதற்கு உதவும் சரிவிகித உணவின் ஒரு முக்கியமான பங்காக அமைகிறது. கொழுப்பு எரிப்பு செயல்முறையை விரைவுப்படுத்துவதற்கு உங்களுடைய சாலட்டை தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி நீங்கள் டிரெஸ்ஸிங் செய்யலாம்.

அதே நேரத்தில் தேங்காய் எண்ணெயோடு முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது வீண் கலோரிகள் சேர்க்கப்படுவதை குறைக்கும். மேலும் தினசரி உடற்பயிற்சி செய்வது இந்த விளைவுகளை இன்னும் அதிகப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். தேங்காய் எண்ணெய் என்பது உடல் எடையை குறைப்பதற்கு போதுமான ஆதரவு தருமேயன்றி, அதனை முழுக்க முழுக்க ஒரு தீர்வாக நீங்கள் நம்பி இருக்கக் கூடாது. எனவே உணவு அளவு கட்டுப்பாடு, சரிவிகித உணவு மற்றும் ஆக்டிவான வாழ்க்கை முறை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vikram to play villain in Marco sequel வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!
  • Views: - 79

    0

    0

    Leave a Reply