கீர்த்தி சுரேஷின் கவர்ச்சிக்கு இவர் தான் காரணமா…நைசா கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆன டாப் நடிகை..!
Author: Selvan31 December 2024, 6:36 pm
தோல்வியை சந்தித்த பேபி ஜான் திரைப்படம்
நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலம் ஆனார்.
தமிழில் இவர் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாமல் ஹோம்லியாக நடித்து வந்துள்ள நிலையில்,திடீரென பாலிவுட் சென்றதும் படு கவர்ச்சியில் நடித்துள்ளார்.பேபி ஜான் திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் வெளிவந்த தெறி படத்தின் ரீமேக் ஆக வெளிவந்த இப்படம்,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவி வருகிறது.இதனால் படத்தின் தயாரிப்பாளரான அட்லீ பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார்.கிட்டத்தட்ட 100 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் 30 கோடியை கூட தாண்டவில்லை.
இதையும் படியுங்க: அஜித் தான் என்னுடைய சுவாசம்…சந்தோசத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ரோபோ சங்கர்..!
இதனால் கீர்த்திசுரேஷுக்கு தன்னுடைய முதல் பாலிவுட் படம் கைகொடுக்கவில்லை.தமிழில் தெறி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார்.சமந்தா தான் பேபி ஜான் திரைப்படத்திற்கு கீர்த்தி சுரேஷை பரிந்துரை செய்துள்ளார்,என்னை விட கீர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என அட்லீயிடம் கூறியுள்ளார்.
இதனை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பார்.முன்னதாக இவர்கள் இருவரும் சேர்ந்து மஹாநடி படத்தில் நடித்திருப்பார்கள்.இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.