வெளிநாட்டில் இருந்து கொண்டே குமரியில் திருடர்களை விரட்டிய வீட்டு உரிமையாளர்.. சுவாரஸ்ய சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2025, 4:22 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் மஸ்கட் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீடு ரஹமத் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது , வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் வீடு முழுவதும் சிசிடிவி பொருத்தி கண்காணித்து வந்துள்ளார் சலீம்.

இதையும் படியுங்க: கருப்பு சிவப்பு நரிகள்… பாஜக போஸ்டர் : கோவையில் பரபரப்பு!

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டில் உள்ள அறைகளின் கதவுகளை ஒன்றொன்றாக உடைத்தும் , பீரோவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

எதேச்சையாக வெளிநாட்டில் இருந்த சலீம் சிசிடிவி கட்சிகளை தனது செல்போனில் ஆய்வு செய்தபோது வீட்டின் உள்ளே இரண்டு நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரது பக்கத்து வீட்டு நபருக்கு போன் செய்து தனது வீட்டில் திருடன் இருப்பதை தெரியப்படுத்தி உள்ளார்.

House owner chased away thieves in Kumari while staying abroad

உடனடியாக பக்கத்துவீட்டினர் வெளியே நின்று கொண்டு திருடன் திருடன் என கூச்சலிடவே பதறிய திருடர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பித்து சென்றனர்,

மேலும் இது தொடர்பாக கோட்டார் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது சலீம் நாளை வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் என்னென்ன பொருட்கள் வீட்டில் இருந்த கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவரும். இந்த சம்பவம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vanitha Vijayakumar personal life நீங்க ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாது…அம்மாவை பார்த்து நடிகையின் மகள் கேள்வி..?