கையில் தூக்கு வாளி…கழுத்தில் துண்டு…புத்தாண்டு விருந்து அளித்த இட்லி கடை..!

Author: Selvan
1 January 2025, 6:53 pm

இட்லிக்கடையின் போஸ்டர் வெளியீடு

தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷ் கடைசியாக இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தன்னுடைய அடுத்த படமான இட்லிக்கடை படத்தை இயக்கிய நடித்து வருகிறார்.

Idli Kadai movie updates

படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் தேனியில் விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கும் போது,திடீரென தனுஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால்,படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தயாரித்து வருகிறார்.இப்படம் வரும் பெப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படமும் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்க: புத்தாண்டில் வாரிசு நடிகருடன் குத்தாட்டம்…போதையில் தள்ளாடிய பேபி நடிகை…ரசிகர்கள் ஷாக்..!

இதனால் தனுஷ் அடுத்த வருடத்தில் இயக்குனர்,நடிகர்,தயாரிப்பளார் என ஜொலிக்க இருக்கிறார்.தற்போது அவருடைய இட்லி கடை போஸ்டர்,புத்தாண்டையொட்டி வெளியாகி ரசிகர்களுக்கு செம விருந்தை அளித்துள்ளது.

அதில் அவர் கையில் தூக்கு வாளியுடன் கழுத்தில் துண்டு போட்டு வீட்டு வாசலில் நிற்கிற மாதிரி ஒன்றும் மற்றொரு போஸ்டரில் ராஜ்கிரணுடன் இருக்குற மாதிரியும் இருக்கும்.இப்படம் ஒரு கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!