SS ஹைதராபாத் பிரியாணியில் ஊர்ந்து சென்ற பூச்சி.. வாடிக்கையாளர் அதிர்ச்சி : ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2025, 10:34 am

கோவை காந்திபுரம், கிராஸ் கட் சாலை, 11 வது வீதியில் உள்ளது எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை, இங்கு நாளுக்கு நாள் பிரியாணி பிரியர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்,

சுவை மிகுதியாக உள்ளதால் மற்ற கடைகளை விட சாதாரண நாட்களில் கூட கூட்டம் காணப்படும். மேலும் விடுமுறை நாட்களில் வரிசையில் காத்து இருந்து பிரியாணி சாப்பிட்டும், பார்சல் வாங்கி செல்வார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் அமைந்துள்ள எஸ்.எஸ் ஹைதரபாத் கடையில் சிக்கனை ஆர்டர் செய்து இருக்கிறார்கள். அப்போது சாப்பிட்டு கொண்டு இருந்த போது அந்த உணவில் புழு இருந்ததாக சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க: புத்தாண்டில் தொடர்ந்து எகிறும் தங்கம் – வெள்ளி விலை!

இந்நிலையில் கோவையில் 11 வது வீதியில் உள்ள அதே கிளையைச் சேர்ந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் ஒருவர் வாங்கிய பிரியாணியில் பூச்சி இருந்து உள்ளது.

Insect crawled in SS Hyderabad Biryani

அதனைக் கண்ட அந்த வாடிக்கையாளர் அது குறித்து கடை ஊழியரிடம் கேட்டு உள்ளார். அப்பொழுது அவர் தனது செல்போனிலும், வீடியோ பதிவு செய்து உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது ஏற்கனவே ஒரு முறை வாங்கிய போது பூச்சி இருந்ததாக ஊழியர்களிடம் தெரிவித்ததாகவும், தற்பொழுது மீண்டும் பூச்சி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும், இதனால் அந்தக் கடையில் சிறுவர்களை அழைத்துச் சென்று உணவு சாப்பிடும் போது பார்த்து உணவுகளை குழந்தைகளுக்கு சரி பார்த்து சாப்பிட கொடுத்து சாப்பிடுமாறு பதிவு செய்து உள்ளார்.

இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 136

    0

    0

    Leave a Reply