டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய முக்கிய பவுலர்…பரிதாபத்தில் இந்திய அணி..!

Author: Selvan
2 January 2025, 1:53 pm

பும்ராவுக்கு மேலும் நெருக்கடி

இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி நாளை சிட்னியில் நடைபெற இருக்கிறது.

முன்னதாக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் படுதோல்வியை சந்தித்தது.இதனால் பல முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Pradeep Krishna replacing Akash Deep

இந்த சூழலில் நாளை நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு வலி பிரச்சனை காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவலை அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.அவருக்கு பதிலாக பிரதீப் கிருஷ்ணா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: தொடர் தோல்வியால் கடுப்பான கம்பீர்…ட்ரெஸ்ஸிங் ரூமில் எடுத்த அதிரடி முடிவு..!

அதே சமயம் வாஷிங்டன் சுந்தரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை.இதனால் அவருக்கு பதிலாக யார் விளையாடப்போகிறார் என்பதை நாளை தெரிய வரும்.இந்த இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்ற தகவலும் வந்துள்ளது. WTC தொடருக்கு,நாளை நடைபெறும் போட்டி இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு என்பதால்,ஆட்டத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது.

  • khushbu sundar twitter account hacked டிவிட்டர் கணக்கை திருடிட்டாங்க; எல்லாமே போச்சு- குஷ்புவுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?